மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பாசோவில் தீவிரவதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் தரப்பில், ”புர்கினோ பாசோவில் மலி எல்லையோரத்தில் திங்கட்கிழமையன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் இதில் பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ராணுவம் தரப்பிலும் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து லோரம் மாகாணம், கொஸ்சி மாகாணம் ஆகிய பகுதிகளுக்கு தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை முடக்கிவிடப்பட்டுள்ளது.” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சுமார் 2 கோடி அளவுக்கு மக்கள் தொகை கொண்ட புர்கினா பேசோ பிரான்ஸ் நாட்டின் காலனியாதிக்கத்தில் இருந்து 1960-ம் ஆண்டு விடுதலை பெற்றது.
பிரான்ஸுடன் நல்ல நட்பில் இருந்து வரும் நிலையில் சமீபகாலமாக இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.