உலகம்

எகிப்து: ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலி

செய்திப்பிரிவு

எகிப்து  தலைநகர் கெய்ரோவில்  முக்கிய ரயில் நிலையத்தில்  ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில்,”எகிப்து தலைநகர் கெய்ரோவில் புதன்கிழமை மத்தியப் பகுதியில் உள்ள முக்கியமான ரயில் நிலையத்திலிருந்த எரிபொருள் டேங் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் 20பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, ‘‘நான்  நடைமேடை மீது நின்று கொண்டு இருந்தேன்.  அப்போது ரயில் ஒன்று வேகமாக வந்தது. திடிரென வெடி சத்தம் கேட்டது. அங்கு நிறைய பேர் இறந்து கிடந்தனர்” என்றார்.

தீ விபத்து நடந்தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக எகிப்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் எகிப்தில் நடந்த மோசமான தீ விபத்தாக இது கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT