இராக்கில் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்த பேருந்து மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து இராக் போலீஸார் தரப்பில், ” இராக்கின் மத்தியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் வந்த பேருந்து மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் பெண் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இராக்கில் ஷியா பிரிவினரை குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலையும் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி இருப்பார்கள் என்று இராக் அரசு சந்தேகம் தெரிவித்துள்ளது.