உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் காயம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில்  இன்று தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் ஒரு பெண் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து ஊடகங்கள், ”பாகிஸ்தானில் பெஷாவர்  நகரிலுள்ள சடார் பகுதியில் அமைந்துள்ள கலாபரி சந்தைப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை  காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.

இதில் ஒரு பெண் உட்பட 6 பேர்  பலத்த காயமடைந்து அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்புக்குப் பிறகு அப்பகுதி பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்னர்.

சுமார் 8 முதல் 10 கிலோ அளவுள்ள வெடி மருத்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெடி மருந்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SCROLL FOR NEXT