உலகம்

செல்லப் பிராணிகளுக்கு பிரிட்னி ஸ்பியர்ஸின் செலவு 31 ஆயிரம் டாலர்கள்

செய்திப்பிரிவு

பிறந்தால் பணக்கார வீட்டில் பிள்ளையாக பிறக்க வேண்டும் என சிலர் விரும்புவதுபோல், வளர்ந்தால் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர வேண்டும் என பிராணிகள் விரும்பும் போல இருக்கிறது. ஏனென்றால், பிரிட்னி ஸ்பியர்ஸ் தனது செல்லப் பிராணிகளுக்காக இந்த வருடம் மட்டும் இதுவரை 31 ஆயிரம் டாலர்கள் செலவழித்ததாக தெரியவந்துள்ளது.

ஹாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களது செல்லப் பிராணிகளுக்காக அதிகமாக செலவு செய்யும் பழக்கம் கொண்டவர்கள். அதில் தற்போது பிரிட்னியும் இணைந்துள்ளார். தனது வரவு செலவு கணக்கை பிரிட்னி ஸ்பியர்ஸ் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் புது வகையான நாய்களை வாங்க அவர் கிட்டத்தட்ட 13 ஆயிரம் டாலர்கள் செலவழித்துள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 5,568 டாலர்கள் கொடுத்து ஒரு நாயும், ஜூலை மாதம் 8,212 டாலர்கள் கொடுத்து ஒரு நாயும் அவர் வாங்கியுள்ளார்.

இதோடு, நாய்களின் உடைகளுக்கு மட்டும் 1,585 டாலர்களும் பராமரிப்புக்கு 5,202 டாலர்களும் செலவழித்துள்ளார். மொத்தக் கணக்கு 31,234 டாலர்களை நெருங்குகிறது. (இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் ரூபாய்)

பரபரப்புக்கு பெயர் போன பிரிட்னி ஸ்பியர்ஸின் பெயர் தற்போது செல்லப் பிராணிகள் விஷயத்திலும் பிரபலமாகியுள்ளது.

SCROLL FOR NEXT