துருக்கி தூதரகத்திலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் கடத்திச் சென்ற 49 ஊழியர்கள் விடுவிக்கப்பட்டதாக அந்நாட்டு பிரதமர் அகமது டவுடோக்லு தெரிவித்தார்.
கடந்த ஜூன் 11-ஆம் தேதி இராக்கின் மொசூல் நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். கைப்பற்றியபோது, துருக்கி துணை தூதரகத்தை தாக்கி அங்கிருந்த ஊழியர்களை கடத்தி சென்றனர்.
இந்த நிலையில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 49 ஊழியர்கள் விடுவிக்கப்பட்டு சனிக்கிழமை அன்று நாடு திரும்பியதாக துருக்கி பிரதமர் அகமது டவுடோக்லு அறிவித்தார்.