பெத்லகேம், வாடிகன் உட்பட உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸை ஒட்டி இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லகேமில் சுமார் 10,000 பேர் குவிந்தனர். அங்குள்ள தேவாலயத் தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையிடமான வாடிகன் தேவாலயத்தில் நேற்று கிறிஸ்து மஸ் பிரார்த்தனை நடைபெற்றது. போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையில் ஆயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.
கிறிஸ்தவர்கள் பெரும் பான்மையாக வசிக்கும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.