உலகம்

இரண்டு நாள் தேடுதல் வேட்டை: பிரான்ஸில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுப்பட்ட இளைஞர் சுட்டுக் கொலை

செய்திப்பிரிவு

இரண்டு நாட்கள் பெரும் தேடுதல் வேட்டைக்கு பிறகு பிரான்ஸின்  ஸ்ட்ராஸ்பர்க்  மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”கடந்த செவ்வாய்க்கிழமை , பிரான்ஸில் உள்ள ஸ்டராஸ்பர்க் நகரத்தில் கிறிஸ்துமஸ் சந்தையில் இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் தாய்லாந்து சுற்றுலா பயணி உட்பட மூன்று பேர் பலியானார். பலர் காயமடைந்தனர். இதனைத் தொடந்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு ஐஎஸ் தீவிரவாதம் இயக்கம் பொறுப்பு ஏற்றது. துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை பிடிக்க பிரான்ஸ் அரசு தனிப்படை அமைத்தது. இதில் 700 போலீஸார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.  இந்த நிலையில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இளைஞர் வியாழக்கிழமை  நியோடார்ப் நகரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர் பெயர் ஷெரிப் சேகத்  (29) என்றும்,அவர் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சூட முயற்சித்தபோது போலீஸார் திருப்பி சுட்டத்தில் அவர் பலியானதாகவும் பிரான்ஸ் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இளைஞருக்கு எதிரான தேடுதல் வேட்டையில் சிறப்பாக செயல்பட்ட, போலீஸாருக்கு பிரான்ஸ் அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT