பிரிட்டனில் தங்களின் குழந்தைக்கு அடால்ஃப் ஹிட்லர் பெயர் வைத்த தம்பதிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக விளங்கியவரும், யூத மக்களை கூட்டமாக அழித்து இனப் படுகொலை நிகழ்த்தியவருமான அடால்ஃப் ஹிட்லரின் பெயர் இன்றளவும் ஒரு சர்ச்சைக்குரிய பெயராகவே உள்ளது. இந்த நிலையில், அதனை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பிரிட்டனில் ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு அடால்ஃப் என்ற பெயர் வைத்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
அடம் தாமஸ், கிளாடியா பெட்டாதஸ் தம்பதி தங்கள் குழந்தைக்கு அடால்ஃப் என்று பெயர் வைத்ததால் கைது செய்யப்பட்டு சிறை தண்டனைக்கு ஆளாகினர்.
இந்தத் தம்பதி பிரிட்டனின் சட்டதிட்டத்திற்கு எதிராகச் செயல்பட்டதாகவும் மேலும் அவர்கள் பிரிட்டனில் தடை செய்யப்பட்ட அமைப்பில் உறுப்பினர்களாக இருந்து கொண்டு அவர்களுக்குப் பிறந்த குழந்தைக்கு அடால்ஃப் என்ற பெயரிட்டுள்ளாகவும் கூறப்படுகிறது.
மேலும் இவர்கள் இருவரும் ஹிட்லரின் கருத்துகளில் ஆர்வம் கொண்டு யூதர்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதாகவும், அனைத்து யூதர்களும் மரணத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று கூறி வந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து கிளாடியாவுக்கு ஐந்து ஆண்டு, தாமஸுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.