உலகம்

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

செய்திப்பிரிவு

தென்அமெரிக்க நாடான சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது.

இதுகுறித்து அமெரிக்க புவியியல் மையம் தரப்பில், ''சிலியில் கிழக்குப் பகுதி தீவுப் பகுதியான  ஹங்கரோ நகரில் இன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியது. நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

தென்அமெரிக்க நாடான சிலியில் நிலநடுக்க அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுவது சமீப ஆண்டுகளில் வழக்கமான ஒன்றாகி விட்டது. 2015 ஆம் ஆண்டு சிலியின்  இலாபெல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலகில் 8.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தல் 13 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்தனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT