உலகம்

துருக்கியில் கரை ஒதுங்கிய இரண்டு தலை டால்பினை காணவில்லை

செய்திப்பிரிவு

துருக்கியில் கடந்த வாரம் கரை ஒதுங்கிய இரண்டு தலை டால்பினை காட்சிக்கு வைக்க அந்நாட்டின் பல்கலைக்கழகம் ஒன்று விரும்புகிறது. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதைப் பற்றிய விவரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

துருக்கியில் இஸ்மிர் நகரத்தில் உள்ள டிகிலி கடற்கரையில் கடந்த வாரம் இரண்டு தலை டால்பின் ஒன்று கரை ஒதுங்கியது. தன் விடுமுறைக் காலத்தைக் கழிக்க அந்தக் கடற்கரைக்கு வந்த துக்ருல் மெதின் என்பவரால் கரை ஒதுங்கிய டால்பின் படமெடுக்கப்பட்டது.

இறந்துபோன அந்த டால்பினை அந்தால்யா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் அந்தப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடல்சார் உயிரியல் ஆய்வாளர் மெஹ்மெத் கோகோக்லு அதை மறுத்துள்ளார்.

அதுபற்றி அவர் கூறும்போது, எங்களிடத்தில் அந்த டால்பின் இல்லை. அது எங்கே இருக்கிறது என்பது பற்றி தகவல் கிடைத்தால் நாங்கள் அதை மீட்டு காட்சிக்கு வைப்போம் என்றார்.

SCROLL FOR NEXT