உலகம்

சீனாவில் தாறுமாறாக ஓடிய லாரியால் பயங்கர விபத்து; தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மோதி ஒன்றன் மேல் ஒன்று குவிந்த பயங்கரம்: 15 பேர்பலி

செய்திப்பிரிவு

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சரக்கு லாரி ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

தொடர்ச்சியாக 31 வாகனங்கள் மோதி ஒன்றன் மேல் ஒன்ரு குவிந்த பயங்கரக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் இது போன்று தொடர் வாகன மோதல் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை லாரிகள், ஓட்டுநர்கள் கடைபிடிப்பதில்லை என்று புகார்கள் அங்கு எழுந்துள்ளன. 

SCROLL FOR NEXT