உலகம்

இத்தாலியில் மூன்று குழந்தை பெற்றால் இலவச நிலம்

செய்திப்பிரிவு

இத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்கும் பொருட்டு  மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கு  இலவச நிலம் வழங்கப்படும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு அர்சு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு ஊடகங்கள், “இத்தாலி உள்ளிட்ட மேலை நாடுகளில் மக்கள் தொகையில் 60 சதவீதத்துக்கும் அதிகமான முதியோர்கள் உள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டில் இளைய தலைமுறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்கள் தொகையை உயர்த்தவும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதன்படி இத்தாலியில் மூன்றாவது குழந்தை பெறுபவர்களுக்கு இலவச மகா நிலம் அளிக்கப்படும்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் சமீபத்தில் எடுத்த புள்ளி விவரத்தின்படி, சுமார் மூன்று லட்சம் குடும்பத்தினர் இரண்டு குழந்தைகளுடன் உள்ளனர். மேலும் இவர்கள் இனி குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாது என்று முடிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2017 ஆம் ஆண்டின் பிறப்பு விகிதத்தின் படி இத்தாலியில் கடந்த ஆண்டு  4 லட்சம் குழந்தைகள் பிறந்துள்ளன. இது 2016 ஆம் ஆண்டை விட 2% குறைவு.

எனவே குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT