புற்று நோய் சிகிச்சைக்காக விமானம் மூலம் இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த நைஜீரிய பெண், பாதி வழியிலேயே துபாயில் பலியானார். அவர் எபோலா வைரஸால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து துபாய் சுகா தாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஓர் உறுப்பிலிருந்து மற் றொரு உறுப்புக்கு பரவும் (மெடாஸ்டேட்டிக்) புற்று நோயால் பாதிக்கப்பட்ட 35 வயது டைய நைஜீரிய பெண் ஒருவர், சிகிச்சைக்காக ஞாயிற்றுக் கிழமை இரவு இந்தியாவுக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார்.
வேறு விமானத்தில் பயணம் செய்வதற்காக அபுதாபி விமான நிலையம் வந்தடைந்த போது அந்தப் பெண்ணின் உடல்நிலை மிகவும் மோச மடைந்தது. உடனடியாக மருத்து வர்கள் சிகிச்சை அளித்த போதும் அவர் இறந்து விட்டார். அவருக்கு எபோலா வைரஸ் தாக்குதல் அறிகுறி கள் தென்பட்டதாக மருத்து வர்கள் தெரிவித்துள்ளனர்.-