உலகம்

ஒரே ஆண்டில் 7,900 சதுர கிலோமீட்டர் காடுகள் அழிப்பு: பிரேசிலில் மோசமான பாதிப்பு

செய்திப்பிரிவு

பிரேசிலில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 7,900 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியான புள்ளிவிவரம் வெளியாகி உள்ளது.

ஊடகங்கள் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கூறப்பட்டிருப்பதவாது,  முதல் கட்ட தகவலின்படி, கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் முதல் ஜூலை 2018வரை  சுமார் 7,900 ஏக்கர் சதுரகிமீ பரப்பு  கொண்ட காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.

இது கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இது 10 சதவீதத்துக்கு மேலாக அதிகரித்துள்ளது. அழிக்கப்பட்ட காட்டுப் பகுதிகள் சுமார் 9 லட்சம் கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சமம் என்றும் கூறியுள்ளது.

மேலும் இதன் காரணமாக பிரேசிலில் பல இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது.

அமேசான் பகுதிகளில்  காடுகளை அழித்து வருவதாலும், சர்வதேச அளவில் புவிவெப்பம் உயர்வதாலும் மழைக்காடுகள் இருக்கும் பகுதியில்கூட மழைப் பொழிவு குறைந்துவிட்டது.

அமேசான் பகுதியில் இயல்பாக சாரல மழைத்துளிகள் அடர்த்தியாக  விழும்,  அவை தற்போதெல்லாம் காண முடிவதில்லை என்று  அந் நாட்டு விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிரேசிலின் கிரின் பீஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மார்சியோ கூறும்போது, ” கடந்த சில வருடங்களில் காடுகள் அதிகம் அழிக்கப்பட்டுள்ளது. நிலைமை மிக மோசமாகி வருகிறது, என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT