அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”கலிபோர்னியா மாகாணத்தில் திங்கட்கிழமையன்று வரலாறு காணாத வகையில் கடும் காட்டுத் தீ பரவியது. இதில் 42 பேர் பலியாகினர். 200க்க்கும் மேற்பட்டடோர் மாயமாகி உள்ளனர்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காட்டுத் தீயிக்கு இரையாகி உள்ளன. மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து விமானங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கலிப்போர்னியாவில் கடந்த வருடம் அக்டோபர், டிசம்பர் மாதங்களில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தக் காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான வீடுகள், சுமார் 26,000 ஏக்கர் பரப்பளவு நிலங்கள் நாசமாயின என்பது குறிப்பிடத்தக்கது.