உலகம்

சிரியாவில் மீண்டும் ரஷ்யா ரசாயன தாக்குதல்: பொது மக்கள் பாதிப்பு

செய்திப்பிரிவு

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ரஷ்யா மீண்டும் தாக்குதல் நடத்தியதில் பொது மக்கள்  பலர் சுவாச கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதியின்  ஒரு சில இடங்களில் சிரியா அரசுப் படைகள் மற்றும் ரஷ்யா ரசாயன வாயு தாக்குதல் நடத்தியதில் குழந்தைகள், பெண்கள் என பொது மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ரஷ்யா தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கபப்ட்டுள்ளது.  தீவரவாதிகளின் கட்டுப் பாட்டு பகுதியில்தான் நாங்கள் தாக்குதல் நடத்தினோம் என்றும். பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் ஊடகங்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் பொது மக்கள் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சிகள் இடப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிரியாவில் கடந்த வருடம் உள் நாட்டுப்  போர் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, ரஷ்யா  நடத்திய ரசாயன தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் பலியாகினர். பலர் சுவாசத்தில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

இந்த நிலையில் மீண்டும் ஒரு ரசாயன தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 -ம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய உள்நாட்டுப் போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன.

இதில் கிளர்ச்சியாளர்களின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை  சிரியா அரசுப் படைகள் கைப்பற்றியுள்ளன.

SCROLL FOR NEXT