உலகம்

நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு: நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது கொலை வழக்கு பதிவு செய்ய லாகூர் செஷன்ஸ் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

லாகூரின் மாடல் டவுன் பகுதி யில் கடந்த ஜூன் 17-ம் தேதி பாகிஸ் தான் அவாமி தெஹ்ரிக் தொண்டர் களுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். 100 பேர் காயமடைந்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் நவாஸ் ஷெரீ்ப், அவரது சகோதரரும் பஞ்சாப் முதல்வருமான ஷாபாஸ் உள்பட 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் சார்பில் லாகூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை சனிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்பட 21 பேர் மீதும் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT