உலகம்

எபோலா தாக்குதல்: மூன்று நாள்களில் 84 பேர் பலி

செய்திப்பிரிவு

எபோலா வைரஸ் தாக்குதலில் மூன்றே நாள்களில் 84 பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

எபோலா வைரஸ் தாக்குதலால் இறந்தவர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான 3 நாள்களில் மட்டும் 84 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எபோலா வைரஸ் தாக்குதலால் உலக அளவில் இறந்தவர் எண்ணிக்கை 1,229 ஆக உயர்ந்துள்ளது. கிசிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,240 ஆக உள்ளது.- ஏஎப்பி

SCROLL FOR NEXT