ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது என்று இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள் ளார்.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை கடந்த அக்டோபர் 26-ம் தேதி அதிபர் சிறிசேனா பதவி நீக்கம் செய்தார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்சவை நியமித்தார். நாடாளு மன்றத்தையும் முடக்கினார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு காரண மாக நாடாளுமன்றம் மீண்டும் கூடியது. நம்பிக்கை வாக்கெடுப் பில் ரணில் பெரும்பான்மையை நிரூபித்தார். மஹிந்த ராஜபக்ச தோல்வியைத் தழுவினார். ஆனால் அதிபர் சிறிசேனா வாக்கெடுப்பை ஏற்க மறுத்து வருகிறார்.
இந்தப் பின்னணியில் அதிபர் மைத்ரிபால சிறிசேனா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய தேசிய கட்சி நாடாளு மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்தாலும் ரணில் விக்ரம சிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்க மாட்டேன். என்னால் அவரோடு இணைந்து பணியாற்ற முடியாது. வேறு யாரையாவது ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரை செய்யலாம்.
ரணில் ஊழல்வாதி. அவரது பொருளாதார கொள்கைகள் நாட்டின் நலனுக்கு எதிரானவை. கடந்த பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரணில் தோல்வியைத் தழுவினார். அப்போதே அவரை பதவி விலக அறிவுறுத்தினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே 100-க்கும் மேற்பட்ட தடவை மோதல்கள் எழுந்தன. மஹிந்த ராஜபக்ச பெரும்பான்மையை நிரூபித்தால் அவர் பிரதமராக நீடிக்கலாம். பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் அவரே முடிவு எடுப்பார்.
இவ்வாறு சிறிசேனா தெரிவித்துள்ளார்.