உலகம்

பாகிஸ்தானில் விமானப்படை தளங்களை தகர்க்க முயன்ற 10 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 2 மாதங்களில் 3-வது சம்பவம்

செய்திப்பிரிவு

பாகிஸ்தானில் உள்ள 2 முக்கிய விமானப்படை தளங்களுக்குள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நுழைய முயன்ற 10 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

பலுசிஸ்தான் மாகாணம் குவெட்டா நகரில், விமானப்படை பயன்படுத்தி வரும் சமுங்ளி விமானப்படை தளம் மற்றும் ராணுவம் பயன்படுத்தி வரும் காளித் விமானப்படை தளம் ஆகிய வற்றுக்குள் ஆயுதம் ஏந்திய சிலர் வெள்ளிக்கிழமை அதிகாலையில் நுழைய முயன்றுள்ளனர்.

அப்போது, தற்கொலைப் படையினர் அணிந்திருப்பது போன்ற பனியன் அணிந்திருந்த அவர்கள் தானியங்கி துப்பாக்கி கள், கையெறி குண்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள் ளனர். அப்போது, கண்காணிப் பில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்புக்கும் இடையே 6 மணி நேரம் நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில், 2 விமானப்படை தளங்களிலும் தலா 5 பேர் என மொத்தம் 10 தீவிரவாதிகள் பலியாயினர். 12 பாதுகாப்புப் படையினர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

இதன்மூலம் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக இதுபோன்ற தாக்குதல் நடைபெற்றுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, இந்தத் தாக்குதலுக்கு தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. “வடக்கு மற்றும் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் அப்பாவி மக்களை ராணுவம் கொன்று வருவதற்கு பழிவாங்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தினோம். இதுபோன்ற தாக்குதல் தொடரும்” என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளரும் கமாண்டருமான கலிப் மெசூத் தெரிவித்துள்ளார்.

5 பேர் கைது

இதுகுறித்து காவல் துறை கண் காணிப்பாளர் இம்ரான் குரைஷி கூறும்போது, “சமுங்ளி விமானப் படை தளம் மீதான தாக்குதல் தொடர்பாக 5 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இறந்தவர்கள் உஸ்பெகிஸ்தா னைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என கருதுகிறோம்” என்றார்.

காளித் விமானப்படை தளம் அருகிலிருந்து 4 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதை பாது காப்புப் படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர். மேலும் அப்பகுதி யிலிருந்து 11 ராக்கெட் லாஞ்சர் களையும் கைப்பற்றி உள்ளனர். இதுபோல் சமுங்ளி விமானப்படை தளத்திலிருந்தும் ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் கராச்சி விமான நிலையத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி யதில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இதுவரை 500 தீவிரவாதிகளும் 29 வீரர்களும் பலியாகி உள்ளனர்.

SCROLL FOR NEXT