கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்துக்கு 12 பேர் பலியாகினர். 188 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தரப்பில், ,”ஹைதியில் சனிக்கிழமை இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 12 பேர் பலியாகியுள்ளனர். 188 பேர் காயமடைந்தனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகிறது” என்று கூறியுள்ளது.
நிலநடுக்கம் குறித்து ஹைதி பிரதமர் ஜின் ஹென்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் "உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். வடக்குப் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது" என்று பதிவிட்டுள்ளார்.
பல்வேறு பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் ஹைதி அடிக்கடி இயற்கை சீற்றங்களால் அவ்வப்போது பாதிக்கப்படுகிறது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்துக்கு 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.