உலகம்

உக்ரைன் நாடாளுமன்றம் கலைப்பு

செய்திப்பிரிவு

உக்ரைன் நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கலைக்கப்பட்டது. அங்கு அக்டோபர் 26-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

உக்ரைனில் பிரதமர் ஆர்செனி யாட்சென்யுக் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. திடீரென இரு கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால் பிரதமர் ஆர்செனி கடந்த ஜூலை 24-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாடாளுமன்றத்தை கலைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 26-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று அதிபர் கூறியுள்ளார். உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தத் தேர்தலின் மூலம் உக்ரைனில் ஸ்திரமான அரசு அமையுமா என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

SCROLL FOR NEXT