உலகம்

ராணுவ உறவையும் தாண்டி இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவு: அமெரிக்கா விருப்பம்

செய்திப்பிரிவு

ராணுவ உறவையும் தாண்டி இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை வளர்க்க அமெரிக்கா விரும்புகிறது என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல் தெரிவித்துள்ளார். ஜெர்மனி, இந்தியா, ஆஸ்தி ரேலியா ஆகிய நாடுகளில் அமைச் சர் சக் ஹேகல் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். முதல்கட்டமாக ஜெர்மனி சென்ற அவர் அங்கிருந்து வியாழக்கிழமை மாலை டெல்லி வந்தார்.

ராணுவ உறவு மட்டுமல்ல

முன்னதாக ஜெர்மனியில் புதன்கிழமை அவர் கூறியதாவது:

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் புதிய நட்பு நாடுகளை நாங்கள் தேடி வருகிறோம். அந்த வகையில் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குச் செல்கிறேன். அங்கு அண்மையில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. ஏற்கெனவே அமெரிக்க வெளியு றவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, வர்த்தகத் துறை அமைச்சர் பென்னி ஆகியோர் கடந்த வாரம் டெல்லி சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நானும் டெல்லிக்கு செல்கிறேன்.

இந்திய, அமெரிக்க உறவு வெறும் ராணுவ உறவு மட்டுமல்ல. அதையும் தாண்டி இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை ஏற்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேச உள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே எனது டெல்லி பயணம் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ரூ.20,000 கோடி ராணுவ ஒப்பந்தங்கள்

சக் ஹேகலின் டெல்லி பயணத்தின்போது ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ ஒப்பந் தங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்புத் துறை மூத்த அதிகாரிகளை சக் ஹேகல் சந்தித்துப் பேச உள்ளார்.

இந்திய ராணுவத்துக்கு அமெரிக்காவிடமிருந்து 22 அப்பாச்சி ரக போர் ஹெலிகாப் டர்கள், 15 சினூக் கனரக ஹெலிகாப் டர்கள், நான்கு பி-81 போர் விமானங்கள் ஆகியவற்றை வாங்க இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

SCROLL FOR NEXT