உலகம்

இந்தோனேசிய பலி எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியது

செய்திப்பிரிவு

இந்தோனேசிய நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 2,000-ஐ நெருங்கியுள்ளது.

இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சுலாவேசி தீவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அங்குள்ள கடற்கரை நகரமான பலுவை, சுனாமி தாக்கியது.  இதன் காரணமாக கடலோரத்தில் இருந்த பெரிய அளவிலான குடியிருப்புகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என அனைத்தும் இடிந்து தரை மட்டமாகின.

இந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மீட்புப் பணிகள் நடந்து வரும் வேளையில், சுனாமி மற்றும் நிலநடுக்கப் பாதிப்புகளுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,000 -ஐ நெருங்கியுள்ளது.

இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரி கூறும்போது, "பலு நகரில் தற்போது ஓரளவு இயல்பு நிலை திரும்புள்ளதால் மாணவர்கள் கல்விக்கூடங்களுத் திரும்பியுள்ளனர். அங்கு சுனாமி மற்றும் நிலநடுக்கங்களில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT