அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் கொடூரமான விசாரணை நடைமுறைகளைப் பற்றி விசாரித்து வரும் செனட்டர் களின் (எம்.பி.க்கள்) கணினிகளை வேவு பார்த்ததற்காக மன்னிப்புக் கேட்டுள்ளது.
இதுகுறித்து சி.ஐ.ஏ. வெளி யிட்டுள்ள அறிக்கையில், ‘சி.ஐ.ஏ. அமைப்புக்கும் செனட்டுக்கும் இடையில் 2009ம் ஆண்டில் உருவான புரிந்துணர்வை மதிக்காமல் சி.ஐ.ஏ. வின் ஊழியர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்' என்று கூறியுள்ளது.
"அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் அமைப்பில் இது போன்ற சம்பவங்கள் எல்லாம் அந்த அமைப்பைச் சீர்குலைத்துவிடும்" என்று கூறியுள்ளார் செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் ஹேரி ரீட். அவர் மேலும் கூறியதாவது:
"மற்ற துறைகளை மேற்பார்வையிடும் பொறுப்பு நாடாளுமன்றத் துக்கு இருக்கிறது. ஆனால் சி.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கை அந்தப் பொறுப்பை வலிவற்ற தாக்கச் செய்யும் முயற்சி ஆகும்.
சிஐஏமீது மேற்கொள்ளப்பட் டிருக்கும் விசாரணையின் முடிவு களைக் கைப்பற்றவும் அவை வெளியாவதைத் தடுக்கவும் அந்த அமைப்பு எவ்வளவு தூரம் செயல்படும் என்பது இதன் மூலம் தெளிவாகிறது" என்றார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சி.ஐ.ஏ.வின் இயக்குநர் ஜான் ப்ரென்னான் மன்னிப்புக் கேட்டுள்ளதாகவும், இந்தக் குற்றம் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்ள தனியாக ஒரு குழுவை அமைத்திருப்பதாகவும், அதன் மூலம் இந்தத் தவற்றுக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் செனட்டர்களிடம் கூறியுள்ளதாகவெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.