உலகம்

ஸ்டீபன்  ஹாக்கிங் பொருட்கள் ஏலம்

செய்திப்பிரிவு

மறைந்த இயற்பியல் விஞ்ஞானியான  ஸ்டீபன் ஹாக்கிங்கின் சக்கர நாற்காலி, ஆய்வறிக்கைகள் உட்பட 20 பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளன.

ஆன்லைன் மூலம்  நடைபெறும் இந்த ஏலத்தை இன்று (திங்கட்கிழமை) கிரிஸ்ட் ஏல நிறுவனம் அறிவித்தது. இந்த ஏலத்தில் ஸ்டீபன் ஹாக்கிங்கின் இருபது பொருட்கள் இடம்பெற இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, ஸ்டீபன் வாழ்வில் பெரும்பகுதியைச் செலவிட்ட சக்கர நாற்காலிகள் மற்றும்  அவரது புகழ்பெற்ற ஆய்வறிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்தப் பொருட்கள் சுமார் 1,30,000  டாலரிலிருந்து  1,95,000 டாலர் வரை ஏலம் போகும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக இயற்பியலாளரும்,  உலக அளவில் அதிக அளவில் விற்ற நூல்களின் ஆசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் மார்ச் மாதம் காலமானார்.

தனது சக்கர நாற்காலியில் இருந்தபடி ‘காலத்தின் சுருக்கமான வரலாறு: பெருவெடிப்பிலிருந்து கருந்துளைகள் வரை’ (எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்: ஃப்ரம் பிக் பேங் டு ப்ளாக் ஹோல்ஸ்’)  போன்ற புகழ்மிக்க நூல்களை எழுதியவர் ஸ்டீபன் ஹாக்கிங். இந்த நூல்கள் ஒரு கோடி பிரதிகளுக்கும் மேல் விற்பனையாகி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT