உலகம்

துருக்கி: அமெரிக்க தூதரகத்தில் துப்பாக்கிச் சூடு

செய்திப்பிரிவு

துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் திங்கட்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டால் இரு நாடுகள் உறவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்து துருக்கி ஊடகங்கள் தரப்பில், "துருக்கி தலைநகர் அங்காரவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் திங்கட்கிழமை வாகனத்தில் வந்த மர்ம  நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க தூதரக அலுவலகத்திலிருந்து கதவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தத் துப்பாக்கிச் சூட்டில்  யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் எந்தவித உயிர் சேசதமும் நேராமல் தடுத்தற்ககாக அமெரிக்க தூதரகம் தரப்பில்  நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்கியதற்காக துருக்கி மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை துருக்கி கண்டித்தது.

மேலும் ஈரானிடம்  இருந்து  கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை என்று துருக்கி அமெரிக்காவுக்கு பதிலளித்திருந்தது. இந்த நிலையில் துருக்கி மீது இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுத்துள்ளது பழிவாங்கும் நடவடிக்கை என்று குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், துருக்கியிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT