உலகம்

திமிங்கலத்துடன் செல்ஃபி எடுத்த இளைஞர்: வைரலாகும் வீடியோ

செய்திப்பிரிவு

ஆடம் ஸ்டெர்ம் என்ற கடல் மூழ்காளர் (கடலில் நீந்துபவர்) ஒருவர் ஆழ்கடலில் திமிங்கலத்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியும், வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

ஆகஸ்ட் நான்காம் தேதி டொங்கா நாட்டின் கடல் புறத்தில்  நுக்கு அலோஃபா கடலின் ஆழப் பகுதியில் திமிங்கலத்துடன் எடுத்த வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

அந்த வீடியோவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆடம் ஸ்டெர்ம் என்ற மூழ்காளர் பிரதானமாக இடம் பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, " நாங்கள் ஆழ்கடலில் நீந்திக் கொண்டே  பாடிக் கொண்டிருந்தோம் அப்போது எங்கள் அருகில் பெண் திமிங்கலம் ஒன்று வந்தது.  நாங்கள் அதைப் பார்த்தது நீரில் சுழன்று காட்டினோம். அதுவும் எங்களைப் போன்று சுழன்றது. எங்களுடன் அரை மணி நேரம் நடனம் ஆடியது என்று கூறலாம். எங்களுக்கு ஒரு உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்பட்டது” என்றார்.

SCROLL FOR NEXT