உலகம்

60 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் காதலனை மணக்கும் 79 வயது காதலி

செய்திப்பிரிவு

லண்டனைச் சேர்ந்த ரூத் ஹோல்ட் என்ற மூதாட்டி 60 ஆண்டுகளுக்குப் பிறகு தனது முதல் காதலனை திருமணம் செய்ய இருக்கும் சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது

1950 - களில்  79 வயதான ரூத் ஹோல்ட் என்ற முதாட்டியும், 84 வயதான ரான் ஓவனும் அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் போது காதலித்துள்ளனர். அதன் பிறகு வாழ்கை இருவருக்கு வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டது. ரான் பாடகராக வேண்டும் என்று தனது கனவை நோக்கி நகர, ரூத்  வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சவுதி அரேபியாவுக்குச் சென்றார்.

அதன்பிறகு 83-ல் குடும்ப உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ரூத் விவகாரத்து செய்துக் கொண்டார். அது முதல் தனது முதல் காதலையே ரூத் நினைத்துக் கொண்டிருந்துள்ளார். ரான் எங்கு இருக்கிறார், தற்போது என்ன செய்துக் கொண்டிருக்கிறார் என நாட்களை நகர்த்தி கொண்டிருந்த ரூத்துக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

தற்போது நான்கு பேர குழந்தைகளுடன் வசித்து வரும் ரூத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர்  அவரது சகோதரி மூலம் இசை நிகழ்ச்சிக்கும் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த இசை நிகழ்ச்சியில் ரான் என்ற பாடகர் பாட இருப்பதாகவும் அவது சகோதரி கூறி இருக்கிறார்.

இதுகுறித்து ரூத் கூறும்போது, "நான் நேசித்த ரான் என்று கேட்டப்போது எனக்கு நம்ப முடியாத பதில் கிடைத்தது. அது ரான்தான்  என்று.

அதனைத் தொடர்ந்து அவரை சந்தித்து பேசினேன்.  2014 ஆம் ஆண்டு ரான் என்னை காதலிப்பதாக கூறினார். வரும் செப்டம்பர் மாதம் நாங்கள் திருமணம் செய்ய இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

60 ஆண்டுகளுக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளும் இந்த காதலர்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT