ஆப்கானிஸ்தானிலுள்ள கிழக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், "ஆப்கனின் கிழக்குப் பகுதியிலுள்ள நான்கர்ஹர் மாகாணத்தில் அமெரிக்கப் படைகள் சனிக்கிழமை முதல் ஐஎஸ் படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றன. ஞாயிற்றுகிழமை நடத்திய தாக்குதலில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த படை தளபதியான அபு சையித் கொல்லப்பட்டார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ் இயக்கம் ஆப்கானிஸ்தானில் கடந்த 2014 ஆம் முதல் வேரூன்ற ஆரம்பித்தது. அன்று முதல் ஆப்கனில் சிறுப்பான்மையினராக உள்ள ஷியா முஸ்லிம்கள் மற்றும் ராணுவ படைகள் மீது ஐஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க படையுடன் இணைந்து ஆப்கன் அரசு ஐஎஸ்ஸுக்கு எதிரான போரை நான்கு வருடங்களாக தொடுத்து வருகின்றது.