விடுதலைப் புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்டப் போரின் போது ராணுவம் மனித உரிமைகளை மீறியதாகவும் போர்க்குற்றத் தில் ஈடுபட்டதாகவும் கூறப்படும் புகார்கள் பற்றி சர்வதேச விசாரணை நடத்த அனுமதிக்கும் தீர்மானத்தை செயல்படுத்த ஐ.நா. மனித உரிமை கவுன்சிலுக்கு ஒத்துழைப்பு தரும் படி இலங்கையை கேட்டுக் கொண்டுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான்கி மூன்.
இந்த தகவலை ஐ.நா. பொதுச் செயலரின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: இலங்கையில் நிகழ்ந்த சர்வதேச மனிதாபிமான, மனித உரிமைகள் சட்ட மீறலுக்கு பொறுப்பு ஏற்பது முக்கியத்துவம் வாய்ந்தது என பான் கி மூன் வலியுறுத்தி இருக்கி றார். இலங்கையில் அமைதி, நல்லி ணக்கத்தை மேம்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் காட்டும் அக்கறையை வரவேற்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த வாரம் நிறைவேறிய தீர்மானத்தை அமல்படுத்த மனித உரிமை ஆணையருடன் ஆக்க பூர்வமாக பேச்சு நடத்தி ஒத்து ழைப்பு தரவேண்டும் என இலங்கை அரசை பான் கேட்டுக் கொண்டுள் ளார் என்றும் ஹக் தெரிவித்தார்.
விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்காது என அமைச்சர் மகிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளது பற்றி கேட்டபோது இந்த விவரத்தை தெரிவித்தார் ஹக்.
2009ல் நடந்த இறுதிக்கட்டப் போரின்போது நடந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக இலங் கைக்கு எதிராக அமெரிக்கா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர் மானம் கடந்த 27-ம் தேதி வாக்கெடுப்பில் நிறைவேறியது. 23 நாடுகள் ஆதரித்தும் 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்தன.
இந்தியா உள்ளிட்ட 12 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்க வில்லை.