நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை எம்பியாக பதவியேற்ற இம்ரான்கான் புகைப்படம் எடுக்கும்போது கோட்டை கடன் வாங்கி அணித்திருக்கிறார்.
இந்த நிகழ்வு தற்போது அந்நாட்டு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது
திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் எம்பியாக பதவியேற்றார். அப்போது எம்பி பதவியேற்பு ஆவணத்தில் கையெழுத்திட்டு நாடாளுமன்றத்துக்கான அடையாள அட்டை பெறுவதற்காக புகைப்படம் எடுப்பது வழக்கம்.
அவ்வாறு புகைப்படம் எடுக்கும்போதும் இம்ரான் கோட் அணியவில்லை, வெள்ளை நிற ஜிப்பா மட்டும் அணிந்திருந்தார். பின்னர் அங்கிருந்த நாடாளுமன்ற ஊழியரது கோட்டை அணிந்து கொண்டு அடையாள புகைப்படத்துக்கு இம்ரான் கான் போஸ் கொடுத்தார்.
கோட்டை இம்ரான் கடன் வாங்கி அணியும் வீடியோ
கடந்த மாதம் 25-ம் தேதி 272 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. எனினும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து சிறிய கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளார். வரும் 18-ம் தேதி புதிய பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.