உலகம்

இராக்கில் ஐஎஸ்ஐஎஸ் கட்டுப்பாட்டில் இருந்த 2 நகரங்கள் மீட்பு

செய்திப்பிரிவு

இராக்கின் குர்திஷ் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள் ஆக்கிரமித்த இரு நகரங்கள் அவர்களது பிடியிலிருந்து மீட்கப்பட்டன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவை அடுத்து இராக்கில் கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. குர்திஷ் பகுதியில் உள்ள ஜிவர், மக்மோர் ஆகிய நகரங்களில் பதுங்கிய கிளர்ச்சியாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அந்த நேரத்தில் குர்திஷ் தொழிலாளர் கட்சியும் குர்திஷ் பேஷ்மெர்கா படைகள் இணைந்து கம்கோர் மாவட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக குர்திஷ் தீவிரவாத எதிர்ப்பு அமைப்பின் தளபதி தெரிவித்ததாக ஜிங்குவா செய்தி நிறுவனம் கூறி உள்ளது.

முன்னதாக, எர்பில் நகரின் 40 கி.மீ தென்மேற்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்த க்வேர் பகுதி, அங்குள்ள பேஷ்மர்கா படைகளின் வசம் கொண்டுவரப்பட்டன.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உத்தரவை அடுத்து கிளர்ச்சியாளர்கள் மீது அந்நாட்டு ராணுவம் வான்வழி தாக்குதலை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடத்தி வருகிறது. போர் விமானங்கள் மூலம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்கள் மீது தொடர் குண்டு வீச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

SCROLL FOR NEXT