உலகம்

பிரபல மாடல் ’சோம்பி பாய்’  தற்கொலை

செய்திப்பிரிவு

சர்வதேச அளவில் பிரபல மாடலாக  இருந்த 'சோம்பி பாய்' என்று அழைக்கப்படும்  ரிக் ஜெனெஸ்ட் தற்கொலை செய்துகொண்டார்.

31 வயதான  ரிக் ஜெனெஸ்ட் கனடாவைச் சேர்ந்தவர்.  கனடாவிலுள்ள மாண்ட்ரீ நகரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

உடல் முழுவதும் பச்சை குத்திக்கொண்டு ஒரு சோம்பியின் தோற்றத்தில்  மாடலிங் உலகத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொண்ட   ரிக் ஜெனெஸ்ட், லேடி காகா போன்ற பிரபல பாப்  பாடகர்கள் ஆல்பத்திலும் தோன்றி இருக்கிறார்.

ரிக் ஜெனெஸ்ட் குறித்து லேடி காகா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "ரிக் ஜெனெஸ்ட்டின் இந்த மரணம் பேரழிவைத் தாண்டிய வலியைக் கொடுத்துள்ளது.

நாங்கள் இங்கு நிலவும் கலாச்சாரத்தை மாற்ற முயற்சித்தோம். மனம் சார்ந்த உளவியலை முன்னிலைப்படுத்தி கொண்டுவர வேண்டும் மற்றும் இதனைப்  பேசக் கூடாது என்ற களங்கத்தை நாம் அழிக்க வேண்டும். 

நீங்கள் கஷ்டப்படுவதாக உணர்ந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மனம் விட்டுப் பேசுங்கள். நாம்தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT