கடந்த இரண்டு வாரங்களாக நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 220 பேர் பலியாகியுள்ளனர். இதில் பாதிக் கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்காக இந்தியா ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
நேபாளத்தில் 68-வது இந்திய சுதந்திர தினக் கொண்டாட் டத்தின்போது, இத்தகவலை நேபாளத்துக்கான இந்தியத் தூதர் ரஞ்சித் ரே தெரிவித்தார்.
நேபாள அரசின் வேண்டுகோளுக்கிணங்க, இந்திய நேபாள எல்லையில் நிவாரணப் பணி உதவிக்காக ஒரு விமானமும், மூன்று ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கனமழையால் ஏற்பட்ட வெள் ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 220 பேர் பலியாயினர். இதில் சுர்கேத் மற்றும் பர்தியா மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகளில் இதுவரை 62 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.