உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 6.3 ஆக பதிவு

ஆனந்த்

ஜகார்த்தா: மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியில் 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.54 மணி அளவில் 6.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தோனேசியாவின் மேற்கு பபுவா இந்தோனேசியா பகுதியை மையமாகக் கொண்டு இன்று மதியம் 1.54 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. 39 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 7-ம் தேதி இந்தோனேசியாவில் 4.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT