இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ கமாண்டர்கள், அணுசக்தி விஞ்ஞானிகளின் உடல்களுக்கு ஈரானில் நேற்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது. தலைநகர் டெஹ்ரானில் இஸ்லாமிய புரட்சி சதுக்கத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். படம்: பிடிஐ 
உலகம்

ஈரானில் உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு இறுதிச் சடங்கு

செய்திப்பிரிவு

டெஹ்ரான்: ஈரான் அணு ஆயுதம் தயாரிப் பதை தடுக்க இஸ்​ரேல் தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான ராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்​ஞானிகள் பலர் கொல்​லப்​பட்​டனர். இஸ்​ரேல் தாக்​குதலில் மேஜர் ஜெனரல் மொகம்​மது பஹெரி, கமாண்​டர் உசைன் சலாமி, அணுசக்தி விஞ்​ஞானி மொகம்​மது மெஹ்தி டெஹ்​ரான்சி உட்பட முக்​கிய நபர்​கள் பலர் உயி​ரிழந்​தனர்.

தற்​போது போர் நிறுத்​தம் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், உயி​ரிழந்த ராணுவ கமாண்​டர்​கள், விஞ்​ஞானிகளின் உடல்​களுக்கு நேற்று ஈரான் அரசு மரி​யாதை​யுடன் இறு​திச் சடங்கு நடை​பெற்​றது. தலைநகர் டெஹ்​ரானில் நேற்று காலை இறு​திச் சடங்கு ஊர்​வலம் நடை​பெற்​றது. இதில் ஆயிரக்​கணக்​கான பொது​மக்​கள் பங்​கேற்​றனர். நாட்​டுக்​காக உயிர்த் தியாகம் செய்​தவர்​களை கவுரவிக்​கும் வகை​யில் ஊர்​வலம் நடை​பெற்​ற​தாக ஈரான் தொலைக்​காட்சி செய்தி வெளி​யிட்​டது.

SCROLL FOR NEXT