உலகம்

ஆப்கனில் மோதல்: 2 படைத் தளபதிகள் உட்பட 24 தலிபான்கள்  பலி

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானின் காஸ்னி மாகாணத்தில் தலிபான்கள் மற்றும் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த மோதலில் 2 படைத் தளபதிகள் உட்பட தலிபான்கள் 24 பேர் பலியாகினர்.

இதுகுறித்து ஆப்கன் போலிஸ் தரப்பில், "ஆப்கானிஸ்தானில்  காஸ்னி மாகாணத்திலுள்ள ஜகாத்து மற்றும் கிலன் மாவட்டத்தில் தலிபான்களுக்கும் ஆப்கன் பாதுகாப்புப் படடையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 ஆப்கான் பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்தனர். 

தலிபான்கள் தரப்பில் 24 பேர் பலியாகினர். இதில் தலிபான்களின் படைத் தளபதிகளான முபாரஸ் கோச்சி, காலித் ஆகியோரும் அடங்குவர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால் கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.

எனினும், ஆப்கானிஸ்தானில் அண்மைக்காலமாக ராணுவத்தினர், போலீஸார் குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ்  தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT