உலகம்

ஜனவரியில் நரேந்திர மோடி இலங்கை பயணம்?

செய்திப்பிரிவு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக இலங்கை ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்திய பிரதமரின் வருகை குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. எனினும் அவர் கண்டிப்பாக இலங்கை வர வேண்டும். சீன, ஐப்பான் தலைவர்களும் இலங்கை வர இருக்கிறார்கள்.

இலங்கை வருமாறு இந்திய பிரதமருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுத்துள்ளேன். நவம்பரில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கேற்கும்போது அவருக்கு அழைப்பு விடுப்பேன். இது விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்க் கருத்துகளை நான் கண்டுகொள்ளப்போவதில்லை. அங்கு பலர் அரசியல் ஆதாயத்துக்காக செயல்படுகின்றனர் என்றார்.

SCROLL FOR NEXT