ஆசிய நாடான லாவோஸ்ஸில் அணை உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காணமல்போயுள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள், "ஆசிய நாடான லாவோஸில் தென் பகுதியிலுள்ள ஸி நாம்னோய் அணையின் ஒரு பகுதி உடைந்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருகில் வீடுகள் மூழ்கின. இதில் 17 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் காணமல்போயுள்ளனர். அவர்களை தேடும்பணி நடந்து வருகிறது.
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக 6000ம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
அணை உடைந்தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக லாவோஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்படுள்ளது.