உலகம்

சிங்கப்பூரில் திருட்டு வழக்கில் இந்தியருக்கு சிறை

செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் ரூ. 7 லட்சத்து 24,000 மதிப்புள்ள 4 தங்க பிஸ்கெட் டுகளை திருடியதற்காக , 22 வயது இந்திய வம்சாவளி இளைஞருக்கு 4 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

எஸ்.கே.நாகராஜன் என்ற இந்த மாணவர் தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து நகைக்கடை ஒன்றில் நகைகளை திருடுவதற்கு திட்டமிட்டுள்ளார். இவரது நண்பர்களில் ஒருவரான வெங்கடேஷ் (19) என்பவர் குறிப்பிட்ட நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து, 4 தங்க பிஸ்கெட்டுகளை திருடிக்கொண்டு ஓடிவிட்டார். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

இவர் அளித்த தகவலின் பேரில் நாகராஜும், சாஸ்தா பிள்ளை (29) என்ற மற்றொரு இளைஞரும் கைது செய்யப்பட்டனர். திருடிய தங்கத்தை சாஸ்தா விற்பனை செய்து கொடுத்துள்ளார். இதில் நாகராஜனுக்கு வெள்ளிக்கிழமை தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் மற்ற இருவருக்கும் இன்னும் தண்டனை அறிவிக்கப்படவில்லை.

SCROLL FOR NEXT