உலகம்

ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணைக் கைதி!

செய்திப்பிரிவு

டெல் அவிவ்: காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாத படையினர் விடுவித்தனர். அப்போது பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.

அண்மையில் அப்படி 3 பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அதில் ஒமர் ஷெம் டோவ் என்ற பிணைக் கைதி, ஹமாஸ் படையை சேர்ந்த இரண்டு பேரின் நெற்றி பகுதியில் முத்தம் கொடுத்து விடைபெற்றார். விடுவிக்கப்பட்ட மூவருக்கும் சான்று அளிக்கப்பட்டது. அவர்கள் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்கள் மூவரும் 505 நாட்கள் ஹமாஸ் பிடியில் இருந்துள்ளனர்.

ஒமர் மிகவும் மெலிந்து போயுள்ளார். ஆனால், உற்சாகமாக காணப்படுகிறார். பாசிட்டிவ் மனநிலையை அவர் கொண்டுள்ளார் என அவரது தந்தை கூறியுள்ளார்.

‘அதுதான் என் மகன் ஒமர். அவன் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவான். அதானல் ஹமாஸின் அன்பையும் பெற்றுள்ளான்’ என அவரது தாயார் கூறியுள்ளார்.

#BREAKING Israeli “hostage” kisses the forehead of 2 Hamas members pic.twitter.com/Icg6TDEyEQ

SCROLL FOR NEXT