உலகம்

ஜி 7 மாநாட்டில் ட்ரம்புக்கும் - பிற நாட்டுத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு?

செய்திப்பிரிவு

ஜி 7  மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், அந்தக் கூட்டமைப்பிலுள்ள பிற நாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது..

கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் உள்ளடக்கிய ஜி 7 உச்சி மாநாடு கனடாவின் கியூபெக்கில் லமாவ்பே நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''இந்த  மாநாட்டில் ரஷ்யா பங்கேற்க அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

மேலும் இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது,  ''இம் மாநாடு சுருங்கிவிட்டது. ரஷ்யா இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்க வேண்டும். ரஷ்யா இதில் பங்கேற்க பிற நாடுகள் அனுமதிக்க வேண்டும். விருப்பமோ இல்லையோ முடிவு அவர்களிடம்தான் உள்ளது’’ என்று கூறினார்.

ஆனால் ட்ரம்பின் இந்தக் கருத்தை ஜெர்மனி அதிபர் ஏஞ்சலினா மார்கல், கனடா பிரதமர்  ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் ஏற்கவில்லை என்றும் இந்த மாநாட்டில் பிற நாடுகளின் மீது வர்த்தகத் தடைகளை விதித்திருப்பது தொடர்பாக  டிரம்புக்கும், பிற நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2014-ம் ஆண்டு கிரிமியாவை இணைந்து கொண்டதைத் தொடர்ந்து ரஷ்யா இந்த மாநாட்டிலிருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT