உலகம்

கவுத்தமாலாவில் எரிமலை வெடிப்பு: பலி எண்ணிக்கை 68 ஆக அதிகரிப்பு

செய்திப்பிரிவு

கவுத்தமாலாவில் போகோ எரிமலை வெடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் வெளியிட்ட செய்தியில்,  "கவுத்தமாலாவில் தென் மேற்கே உள்ள போகோ எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து லாவா குழம்பு  வெளியேறியது. இந்த வெடிப்பு எல் ரோடா கிராமம்வரை பரவியதில்  1 லட்சத்துக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன. 

இதில் 12 குழந்தைகள் உட்பட இதுவரை 68 பேர் பலியாகியுள்ளனர். பலர் தீ காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 3000க்கும் அதிகமான மக்கள் தங்கள் இருப்பிடத்திலிருந்து வேறு இடத்துக்கு இடப்பெயர்ந்துள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

எரிமலை வெடிப்பு மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது

கவுத்தமாலா அதிபர் ஜிம்மி மோரேல்ஸ் மூன்று  நாட்கள் துக்க நாளாக அறிவித்திருக்கிறார். இயல்பு நிலை திரும்ப அவசர கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஏற்பட்ட மோசமான எரிமலை வெடிப்பாக கவுத்தமாலா எரிமலை வெடிப்பு கருதப்படுகிறது.

SCROLL FOR NEXT