சோமாலியாவிலிருந்து ஏமனுக்கு கடல்வழி மூலமாக செல்ல முயன்ற எத்தியோப்பியர்களின் படகு விபத்துக்குள்ளானதில் 46 பலியாகினர். பலர் மாயமாகியுள்ளனர்.
இதுகுறித்து குடியேறிகளுக்கான சர்வதேச அமைப்பு அமைப்பு கூறும்போது, ‘‘சோமாலியாவில் இருந்து ஏமனுக்கு செல்ல முயற்சி செய்த எத்தியோப்பியர்களின் படகு புதன்கிழமை காலை விபத்துக்குள்ளானது. இதில் 46 பேர் பலியாகினர் பலர் மாயமாகியுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சுமார் 7,000 பேர் இம்மாதிரியாக சட்டத்துக்கு புறமாக பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த ஒருவருடத்தில் மட்டும் இம்மாதிரி ஒரு லட்சம் பேர் இடப்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு இடப்பெயர்பவர்கள் பிற கொடூரமாக நடத்தப்படுகிறார்கள் இது முடிவுக்கு வந்தடைய வேண்டும்” என்று கூறியுள்ளது.
இந்த விபத்திலிருந்து தப்பியர்கள் கூறும்போது, "ஏமன் உள்ளிட்ட அரபு நாடுகளில் வேலை தேடுவதற்காக சுமார் 100 பேர்களுடன் படகு கிளம்பியது. படகில் பயணித்தவர்கள் யாருக்கும் உயிர் பாதுகாப்பு உடை அளிக்கப்படவில்லை" என்று கூறியுள்ளனர்.
சோமாலியா, எத்தியோப்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் வறுமை நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் ஏமன் போன்ற அரபு நாடுகளுக்கு கள்ளத்தனமாக படகு மூலம் செல்வது தொடர்கதையாகி வருகிறது