ஆப்கானிஸ்தானில் ரமலான் நாளில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைதாக்குதலில் 25 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "ஆப்கானிச்தானின் நான்கர்ஹர் நகரில் சனிக்கிழமை வெடி குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்ததில் 26 பேர் பலியாகினர். பலியானவர்களில் பெரும்பாலோனோர் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள். இதில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
ரமலானை முன்னிட்டு ஆப்கானிஸ்தானில் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை தலிபான்கள் அறிவித்திருந்தனர். ரமலான் பண்டிகையன்று தற்கொலைப்படை தாக்குதல் நடந்துள்ளது.
இந்தக் குண்டுவெடிப்புக்கு தங்களுக்கு சம்பந்தம் இல்லை என்று தலிபான்கள் மறுத்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இது தொடர்பான செய்தியை ஐஎஸ் திவிரவாதிகளில் தங்களது அதிகாரப்பூர்வ இணைய பக்கமான அமாக் நியூஸ் ஏஜென்ஸியில் வெளியிட்டுள்ளனர்.