உலகம்

நேபாள வெள்ளப்பெருக்கு:101 பேர் பலி; நோய் தொற்று ஏற்படும் அபாயம்

செய்திப்பிரிவு

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கால் பலியானோர் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை சீரடையாததால் சுகாதார நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களில் நிலச்சரிவும் அவ்வப்போது ஏற்படுகின்றது. இதுவரை இதில் 101-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

சுமார் 139 பேர் மாயமாகி உள்ளனர். வெள்ளத்தால் 7 ஆயிரம் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்துவிட்டன. எல்லையோரம் உள்ள வேற்று நாடுகளின் எல்லை கிராமங்களில், பல மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.

நேபாள அவசர நிலை உதவி குழுவால் 4 ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள், பாலங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதால், கிராமங்களை மீட்பு குழுவினர் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT