நேபாள சி.பி.என்.-மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டாவை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காத்மாண்டுவில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
20 ஆண்டுகளாக நேபாளத்தில் ஆயுதப் போராட்டத்தை வழிநடத் திய பிரசண்டா, 7 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய அரசியலில் இணைந் தார். பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அவர் நிருபர்களி டம் கூறியதாவது: நேபாளம் அதிவேகமாக வளர்ச்சி அடைய வேண்டும், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வேண்டும் என்பதில் மோடி அக்கறையுடன் செயல்படுகிறார். இதன்மூலம் இந்திய, நேபாள உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.
நேபாள அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் உதவி செய்ய மோடி உறுதியளித்துள்ளார். அவரைச் சந்தித்ததை வரலாற்று சிறப்புமிக்கதாக கருதுகிறேன் என்று கூறினார்.
சீன ஆதரவாளரான பிரசண்டா இந்தியாவை அடிக்கடி விமர்சிப்பது வழக்கம். அவரே பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியி ருப்பது நேபாளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.