மெக்சிகோவில் கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியாவுடனான ஆட்டத்தில் வெற்றிப் பெற்றதை கொண்டாடிய அந்நாட்டு ரசிகர்கள் 16 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ”உலகக் கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடைபெற்ற மெக்ஸிகோ - தென்கொரிய ஆட்டத்தில் மெக்ஸிகோ அணி 2 -1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியை மெக்ஸிகோ ரசிகர்கள் விதிகளில் கொண்டாடியுள்ளனர். அப்போது டெக்சாஸ் எல்லைப் பகுதி மற்றும் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்களை நோக்கிய துப்பாக்கிச் சூட்டதில் 16 பேர் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கலவரங்கள் ஏற்படாமல் இருக்க மெக்ஸிகோ முழுவதும் தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மெக்ஸிகோ போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது ” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துக்கு உண்மையான காரணம் இதுவரை கண்டறிப்படவில்லை. மேலும் மெக்ஸிகோ அரசு தரப்பிலுலம் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கப்படவில்லை.